வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற யாழ். நகர அபிவிருத்தி தொடர்பிலான கூட்டத்தை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் பலர் புறக்கணித்துள்ளனர்.
யாழ். நகரை அபிவிருத்தி செய்வதற்காக உலக வங்கியினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் யாழ். நகரப் பகுதியை அபிவிருத்தி செய்வது குறித்து வடக்கு மாகாண ஆளுநர் இல்லத்தில் குறித்த கூட்டம் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உட்பட பல உறுப்பினர்கள் சமுகமளிக்கவில்லை.
வடக்கு மாகாண முதலமைச்சரினால், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளருக்கு குறித்த கலந்துரையாடலை ஒத்திவைக்குமாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதுடன், குறித்த கடிதம் ஏனைய வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர்.
இவ்வாறான நிலைமையில், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்னோல்ட், எஸ்.சயந்தன், எஸ்.சுகிர்தன், ஆ.பரம்சோதி, அஸ்மின் ஐயூப், சிவயோகம் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
வடக்கு மாகாண ஆளுநர் தனது பொறுப்பினை மீறி செயற்படுவதாகவும், ஆளுநரினால் அழைப்பு விடுக்கப்பட்ட இந்தக் கூட்டத்தில் தாம் கலந்து கொள்ளப்போவதில்லையெனவும் சில உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணிப்புச்செய்தனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பெரும்பான்மையானோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதிலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ளாது புறக்கணிப்புச் செய்துள்ளனர்.

0 Responses to ஆளுநர் தலைமையிலான யாழ். நகர அபிவிருத்திக் கூட்டத்தை முதலமைச்சர் புறக்கணிப்பு!