Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பஷில் ராஜபக்ஷவுக்கு பிணை!

பதிந்தவர்: தம்பியன் 12 May 2016

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் (இன்று மாலை) பிணை வழங்கியுள்ளது.

இதன்படி, 50000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் சரீரப் பிணைகள் மூன்றில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை நிதி குற்ற விசாரணைப் பிரிவில் அவர் ஆஜராக வேண்டும் எனவும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

0 Responses to பஷில் ராஜபக்ஷவுக்கு பிணை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com