Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆட்சி அமைக்கும்போது இருந்த மோடி அலை சதவிகிதம் இப்போது குறைந்துள்ளது என்று, கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

தேசிய நாளிதழ் ஒன்று மோடியின் இரண்டு ஆண்டு கால ஆட்சிக் குறித்துக் கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளது.அந்தக் கருத்துக் கணிப்பில், 2014ம் ஆண்டு மோடி ஆட்சி ஏற்றபோது இருந்த மோடி அலை இப்போது 62 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்றும், இது ஆட்சியின் செயல்பாடு என்கிற சதவிகிதத்திலும் அடங்கும் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இது 67 சதவிகிதமாக இருந்தது என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தூய்மை இந்தியா குறித்த செயல்பாடுகள் நன்றாக நடைபெற்று வருவதாக 42 சதவிகிதம் பேரும், மேக் இன் இந்தியா திட்டம் நன்றாக செயல்படவில்லை என்று 13 சதவிகிதம் பேரும், வேலை வாய்ப்பு என்பது திருப்திகரமாக இல்லை என்று 43 சதவிகிதம் பேரும்,வேலை வாய்ப்பு பரவாயில்லை என்று 9 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர். மோடியின் செயல்பாடுகள் அவரைச் சுற்றி உள்ளவர்களாலே குறைத்து மதிப்பிட்டு வெளியில் வருகிறது என்று 47 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 Responses to பிரதமர் மோடி அலை சதவிகிதம் குறைந்துள்ளது: கருத்துக்கணிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com