Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மக்களின் பிரச்சனைகளுக்காக சட்டப்பேரவையில் திமுகவின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்று, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கு திமுக உறுப்பினர்கள் இரண்டு பேர் ஸ்டாலின் முன்னிலையில், மனுத் தாக்கல் செய்ய வந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், இதுவரை இவ்வளவு உறுப்பினர்களுடன் தமிழக சட்டப்பேரவையில் வலுவான எதிர்க்கட்சி அமைந்ததாக சிறப்பு இல்லை. எனவே, மிகுந்த வலுவான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவின் குரல் மக்களின் பிரச்சனைகளுக்காக, மக்களின் நலனுக்காக ஓங்கி ஒலிக்கும் என்றார்.

பின்னர் சட்டப்பேரவை செயலரிடம் திமுகவுக்கு பெரிய அளவில் அறை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகத் தெரிய வருகிறது. காரணம் 89 உறுப்பினர்களைக் கொண்ட திமுகவுக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட அறை போதாது என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

0 Responses to சட்டப்பேரவையில் திமுகவின் குரல் ஓங்கி ஒலிக்கும்: மு.க.ஸ்டாலின்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com