Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விபரங்களை அறிந்துகொள்ளவும், தகவல்களை உறவினர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கும் ஏதுவாக அமையும் பொருட்டு விசேட தனிப்பணியகமொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த விசேட பிரேரணையின் மூலம் இந்த யோசனையை முன்வைத்திருந்தார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இப்பிரேரணைக்கு அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது.

காணாமற்போனவர்கள் சம்பந்தமாக எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு பரிந்துரைகளை முன்வைத்தல், காணாமற்போனோர் மற்றும் அவர்களது உறவினர்களின் உரிமைகள் மற்றும் பற்றுதல்களை பாதுகாத்துக்கொள்ளல் அறிவுறுத்தல், அரச நிறுவனங்கள் மற்றும் வேறு நிறுவனங்கள் மூலம் கண்டுபிடிப்பதற்கு முடியாமற்போன நபர்களின் விபரங்கள் அடங்கிய தரவுகளை திரட்டி மத்திய தரவு வலையமைப்பொன்றை ஏற்படுத்தி கோவைப்படுத்தல் போன்ற பணிகளை முன்னெடுக்க காணாமற்போனோர் சம்பந்தமான பணியகம் எனும் பெயரில் தனிப்பணியகம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த பிரேரணையில் யோசனைகளை முன்வைத்திருந்தார்.

இதேவேளை காணாமற்போனோர் தொடர்பான விவகாரத்தைக் கையாள்வதற்கு அரசாங்கம் அமைக்கவுள்ள தனிப்பணியகம் குறித்தான ஆரம்ப கட்ட வரைவுநகலின் 90 வீதமான சிபார்சுகளுக்கு தமிழ் தேசியகூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நகல் தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் கையளிக்கப்பட்ட பின்னர் இது தொடர்பில் நன்கு பரிசீலிக்கப்பட்டது. இதில் சில பரிந்துரைகளை மாற்றியமைக்குமாறு கூட்டமைப்பு யோசனை முன்வைத்துள்ளதாகவும் இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

0 Responses to காணாமற்போனோர் தொடர்பிலான தனிப்பணியகத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com