Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

G-7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசீனாவுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்த இரு நாடுகளினதும் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ஒரு நிலையான விலையிடல் முறையின் கீழ் இரு நாடுகளில் இருந்தும் ஆடைகளை ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கு இரு நாடுகளும் உடன்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கிடையிலும் முதலீட்டுத்துறையில் கூட்டுறவை பலப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சராக இருந்தபோது உயர்தர மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக பங்களாதேஷூடன் கைச்சாத்திட்ட உடன்படிக்கை தொடர்பிலும் இச்சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது.

சலுகை விலைகளின் கீழ் மருந்துப் பொருட்களை பரிமாறிக்கொள்வதற்கான ஒரு பயனுள்ள முறைமையை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்கிடையேயும் மிஹின் லங்கா விமான சேவைகளை அதிகரிப்பது தொடர்பிலும் இரு நாடுகளின் தலைவர்களும் கவனம் செலுத்தினர்.

ஐக்கிய நாடுகள் சபையின் சூழல் நிகழ்ச்சித்திட்டத்தின் உயர் சூழல் விருதைப் பெற்றுக்கொண்டமைக்காக பங்களாதேஷ் பிரதமர் ஹசீனாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துத் தெரிவித்தார். சூழலை மிகவும் விரும்பும் ஒரு பிரஜை என்றவகையில் பிரதமர் ஹசீனா இவ்விருதைப் பெற்றுக்கொண்டிருப்பதையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

பங்களாதேஷூக்கு விஜயம் செய்யுமாறு பிரதமர் சேக் ஹசீனா விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, இவ்வருடம் டிசெம்பர் மாதம் பங்களாதேஷூக்கு விஜயம் செய்வதாகவும் குறிப்பிட்டார்.

0 Responses to ஜனாதிபதி - சேக் ஹசீனா சந்திப்பு; இலங்கை பங்களாதேஷ் இடையே வர்த்தக உறவுகளை மேம்படுத்த இணக்கம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com