வடக்கு மக்களின் பிரச்சினைகளை தெற்கிலுள்ளவர்கள் விளங்கிக்கொள்ளமலிருப்பதே நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் தடைகளை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம் என்றதும் வெளிநாட்டவர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் அதிகாரிகளும் வடக்கை நோக்கியே படையெடுக்கின்றனர். உண்மையில் நல்லிணக்கத்தைப் பற்றி எடுத்து விளக்க வேண்டியது தெற்கிலுள்ளவர்களுக்கே. ஏனென்றால், அவர்களே அதன் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ளாதிருக்கின்றனர். அதுவே நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு உள்ள முக்கிய சவாலாக இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
G-7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு தமிழ் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அந்த நேர்காணலின் ஒரு பகுதி வருமாறு,
கேள்வி:- நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்குள்ள முக்கிய சவாலாக எதனைக் காண்கின்றீர்கள்?
பதில்:- வடக்கிலுள்ளவர்களின் பிரச்சினையை தெரிந்துகொள்வதற்கு அன்றேல் அதன் ஆழத்தை விளங்கிக்கொள்வதற்கு தெற்கிலுள்ளவர்கள் முன்வராமையே நல்லிணக்தை முன்னெடுப்பதற்கு பெரும் தடையாகவுள்ளது. வடக்கில் யாழ்ப்பாணத்திலுள்ள முகாம்களுக்கு சென்று பார்வையிட்டால் அவர்களின் நிலைமை புரியும். ஆனால், இங்குள்ளவர்கள் கத்துகின்றார்களே ஒழிய சென்று பார்க்க முன்வருவதில்லை.
சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்து வாழ்ந்தவர்களின் காணிகளை 20 வருடங்கள் கழித்து மீளக் கையளித்தபோது தன்னுடைய காணியை மீளப்பெற்ற ஒருவர் அந்தக் காணியில் வீழ்ந்து படுத்ததைப் பார்த்தேன். அதுபோன்று திரும்பக் கையளிக்கப்பட்ட மற்றுமொரு காணியில் இருந்த தென்னை மரத்தில் ஒருவர் ஏறி இருந்ததைப் பார்த்தேன். கனடாவிலிருந்து வந்த ஒருவர் தன்னுடன் ஒரு டப்பியொன்றை எடுத்து வந்து தன்னுடைய காணியில் மண்ணைத் தோண்டி அதனுள் டப்பியில் எடுத்துவந்ததை புதைத்தார். தமது காணியை அவர்கள் எந்தளவுக்கு நேசிக்கின்றனர் என்பது இதிலிருந்து புலனாகின்றதல்லவா? இதை தெற்கிலுள்ளவர்கள் உணர மறுக்கின்றனர்.
வடக்குக்கு சென்று அங்குள்ள முகாம்களின் வாழும் மக்களின் உண்மை நிலையை அறிந்துகொள்ளுங்கள் என்று கூறினாலும் போகின்றனர் இல்லை. இங்கிருந்து கொண்டு தமக்கு வேண்டியதைக் கூறிக்கொண்டு தவறான தகவல்களைக் கொடுத்து மக்களை திசைதிருப்பிக்கொண்டிருக்கின்றனர். யுத்தம் நடந்த நாடுகளை எடுத்துக்கொண்டால் யுத்தத்தின்போது காணிகளை பிடித்துவைப்பதுண்டு. ஆனால், யுத்தம் நிறைவடைந்த பின்னர் அதனை விட்டுவிடவேண்டும். அப்படித்தான் பல நாடுகளில் நடந்துள்ளது.
நல்லிணக்கம் என்றவுடன் வடக்கு, கிழக்கை நோக்கியே வெளிநாட்டவர்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், அரச அதிகாரிகள் என அனைவரும் படையெடுக்கின்றனர். உண்மையில் நல்லிணக்கத்தின் அவசியத்தைப் பற்றி விளங்கித் தெளிவுபடுத்த வேண்டிய தேவை தெற்கிலேயே இருக்கின்றது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். வடக்கில் அங்குள்ள மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவேண்டும்.
அரச அதிகாரம் என்பது வடக்கில் கடந்த 70 வருடகாலப்பகுதியில் எந்தளவுக்கு இருந்துள்ளதென்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். இந்தக் காலப்பகுதியில் வடக்கில் எத்தனை அமைச்சர்கள் இருந்தார்கள்? ஒரு அமைச்சருக்கு என்ன செய்யமுடியும்? ஒரு பிரதி அமைச்சருக்கு என்ன செய்ய முடியும்? என்று எனக்குத் தெரியும். ஆனால், அது வடக்கு மக்களுக்கு கிடைக்கவில்லை.
தெற்கில் கிராமங்களுக்குப் போகும்போது அங்கு சந்திக்கும் மக்களின் தோற்றத்தைப் பார்த்தவுடன் அவர்கள் எப்படியிருக்கின்றார்கள் என்பதை விளங்கிக்கொண்டுவிடலாம். ஒருவர் வங்கியில் எவ்வளவு பணத்தை வைத்திருக்கின்றார் என்பதிலோ அன்றேல் அவரிடம் எத்தனை காணிகள் இருக்கின்றன என்பதிலோ அன்றி அவரைப் பார்க்கும்போதே வாழ்க்கைத் தரத்தின் நிலைமையை விளங்கிக்கொண்டுவிடலாம்.
மொழிப் பிரச்சினை என்பது இன்னமும் தீர்க்கப்படாத பெரும் பிரச்சினையாகவே இருக்கின்றது. அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். வடக்கிலுள்ளவர்களின் காணிகளைத் திரும்பக்கொடுக்காமல் தொடர்ந்தும் வைத்திருந்தால் எதிர்காலத்தில் மீண்டும் நாம் யுத்தமொன்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதனாலேயே காணிகளைத் திருப்பிக் கையளிக்க வேண்டிய விடயத்தை மீண்டுமாக வலியுத்தி வருகின்றேன்.
நான் வடக்கிற்கு சென்றபோது இராணுவ முகாம்களுக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு கிணறுகள் இருப்பதைக் கண்ணுற்றேன். கிணறுகள் என்பது அங்கு வீடுகள் இருந்துள்ளதைக் காட்டுகின்றது. அந்தக் கிணறுகள் கட்டப்பட்டுள்ள விதத்தை வைத்து அங்கு வாழ்ந்தவர்களின் நிலையை விளங்கிக்கொள்ளமுடியும். சிறப்பாக வாழ்ந்துள்ளனர் எனப் புரிந்துகொள்ளமுடியும். வடக்கு விஜயத்தின்போது அங்குள்ள பாடசாலையொன்றை நான் மக்களிடம் மீளக் கையளித்திருந்தேன். உண்மையில் கூறுவதென்றால் அந்தப் பாடசாலையை நாம் எப்போது திருப்பிக் கையளித்திருக்க வேண்டும். யுத்தம் நிறைவடைந்த பின்னர் அதை உடனடியாக திருப்பிக் கையளித்திருக்க வேண்டுமல்லவா?
கேள்வி:- வடக்கில் இராணுவ முகாம்கள் இருப்பதை மக்கள் விரும்பவில்லை. சர்வதேசமும் இந்த விடயத்தில் கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர். நீங்கள் இதனை எப்படிப் பார்க்கின்றீர்கள்? வடக்கில் இராணுவ முகாம்கள் இருக்க இருக்க சர்வதேச நெருக்கடி அதிகரிக்குமல்லவா?
பதில்:- வடக்கில் இராணுவ முகாம்கள் தொடர்ந்தும் இருக்க இருக்க சர்வதேசத்தின் அழுத்தம் அதிகரிக்கும் என்பது உண்மையானது. யுத்த காலத்தின்போது கொழும்பில் பல இடங்களில் சோதனைச் சாவடிகள் இருந்தன. இராணுவத்தின் பிரச்சினை இருந்தது. ஆனால், யுத்தம் நிறைவடைந்ததும் அவை அகற்றிக்கொள்ளப்பட்டன. யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இராணுவத்தினர் இங்கு நிலைகொண்டிருந்தால் மக்களின் மனநிலை எப்படியிருக்கும்? அதனை ஏற்றுக்கொள்வார்களா? நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஜப்பானைப் பாருங்கள் வழமையான நாட்களில் இங்கு பொது இடங்களில் ஒரு பொலிஸைக் கூடப் பார்க்க முடியாது.
கேள்வி:- ஜெனிவாத் தீர்மானத்தால் எழுந்துள்ள நெருக்கடி நிலையை எதிர்கொள்வதற்கு அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுக்கின்றது என எண்ணுகின்றீர்களா?
பதில்:- வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களில் வாழும் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியேற்றினாலேயே 75 வீதமான ஜெனிவாப் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிடலாம் என்பதில் எனக்கு நம்பிக்கையுள்ளது.
கேள்வி:- G-7 மாநாட்டுடன் இணைந்ததாக நடைபெற்ற நிகழ்விலே முதன்முறையாக பங்கேற்ற இலங்கைத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கின்றீர்கள். இதன்போது G-7 தலைவர்கள் என்ன கூறினார்கள்?
பதில்:- G-7 மாநாட்டில் பங்குகொண்ட தலைவர்கள் இலங்கைக்கு சிறப்பான வரவேற்பை வழங்கினார்கள். நல்லிணக்கத்தைப் பலப்படுத்தி ஊழல் மோசடிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலமாகவே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்பதை வலியுறுத்திக் கூறினார்கள். அவர்களது நிலைப்பாடு சரியானதென்றே நான் காண்கின்றேன்.

0 Responses to வடக்கு மக்களின் பிரச்சினைகளை தெற்கிலுள்ளவர்கள் விளங்கிக்கொள்வதில்லை: ஜனாதிபதி