Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த வியாழக்கிழமை எகிப்து ஏர் நிறுவனத்தைச் சேர்ந்த ஏர்பஸ் 320 விமானம் 66 பயணிகளுடன் மத்திய தரைக் கடற் பரப்பில் விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த அனைவருமே உயிரிழந்து இருந்தனர். இந்த விமான விபத்தின் பின்னர் இதுவரை மிகச் சிறிய சேதமடைந்த பாகங்களே கிடைத்திருப்பதால் விமானம் விபத்தில் சிக்க முன்னர் வெடித்துச் சிதறியிருக்கலாம் எனப் பெரும்பாலும் கருதப் பட்டது.

ஆனால் தற்போது நிகழ்ந்து முடிந்துள்ள தடயவியல் சோதனைகளின் முடிவின் படி எகிப்து ஏர் விமானம் வெடித்துச் சிதறவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பாரிஸ் இல் இருந்து கெய்ரோ நோக்கிச் சென்ற போது விபத்தில் சிக்கிய குறித்த விமான விபத்தில் இருந்து கொல்லப் பட்ட மனிதர்களது முக்கியமான உடற் பாகங்கள் மற்றும் விமான சேதங்களோடு முக்கியமாகக் கருப்புப் பெட்டியும் தற்போது தீவிரமாகத் தேடப் பட்டு வருகின்றது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை வரை 23 பைகள் நிறைய உடற்பாகங்கள் மீட்கப் பட்டதாகக் கூறப்பட்ட போதும் இதில் மிகப் பெரிய பாகம் ஒரு கையளவு கூட இருக்காது எனப்பட்டுள்ளது. இந்த உடற்பாகங்களில் வெடித்துச் சிதறியதற்கான ஆதாரம் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.

ஆனால் விபத்து குறித்து உறுதியான முடிவு இவ்வளவு விரைவாக எட்டப் பட முடியாது என்றுள்ள தடயவியல் நிபுணர்கள் எகிப்து ஏர் இன் flight 804 விமானம் ஏன் கடலில் வீழ்ந்து விபத்தில் சிக்கியது என இதுவரை உறுதியான காரணம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் பிரெஞ்சு ஆய்வாளர்களோ விமானம் விபத்தில் சிக்க முன் உள்ளே தீ ஏற்பட்டு புகை பரவியதற்கான எச்சரிக்கைகள் விமானத்தில் இருந்து கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் சிலவேளை கணணி கோளாறாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளனர்.

மத்திய தரைக் கடலில் 3000 அடி ஆழத்திலுள்ள இவ்விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் சிக்னல்களை அடிப்படையாகக் கொண்டு அதனைத் தேட அதன் பேட்டரி 30 நாட்கள் ஆயுட் காலமே உடையது என்பது குறிப்பிடத்தக்கது. தேடுதல் பணியில் எகிப்து இன் ரோபோ நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் பிரான்ஸின் தேடு கப்பல் ஆகியவை ஈடுபட்டு வருகின்றன.

0 Responses to எகிப்து விமானம் எவ்வாறு விபத்துக்கு உள்ளாகியது?: புதிய தகவல்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com