Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈரானின் முக்கிய ஷைட்டி மதகுருவான நிம்ர் அல் நிம்ர் என்பவருக்கு சவுதி அரேபியா மரண தண்டனை அளித்ததால் ஜனவரி 2 முதற்கொண்டு இவ்விரு நாடுகளுக்கும் இடையே அரசியல் பதற்ற நிலை தோன்றியுள்ளது. உச்சக் கட்டமாக இவ்வருடம் சவுதி அரேபியாவுக்கான ஈரான் முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரை ரத்து செய்யப் பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

மேலும் கடந்த வருடம் சவுதி ஹஜ் யாத்திரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 2426 பேர் பலியாகி இருந்தனர். இதில் 464 பேர் ஈரானியர்கள் என்றும் இவர்களது மரணத்துக்கு உரிய பரிகாரம் இன்னமும் முறையாக கையாளப் படவில்லை என்றும் கூட ஈரான் தெரிவித்திருந்தது. இத்தகைய அழுத்தங்களைத் தொடர்ந்து இவ்வருடம் ஈரான் ஹஜ் யாத்திரையைப் புறக்கணிப்பதாக வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே யேமென் உள்நாட்டுப் போர் விவகாரத்துல் ஷைட்டி முஸ்லிம் நாடான ஈரானும் சுன்னி முஸ்லிம் இராச்சியமான சவுதியும் பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ள போதும் இதுவரை முன்னேற்றகரமான ஒரு முடிவை எடுக்க முடியவில்லை.

ஆயுதம் தாங்கியிராத ஈரான் ஷைட்டி மதகுருவான நிம்ர் அல் நிம்ர் மிக ஆபத்தான தீவிரவாதி என முத்திரை குத்தப் பட்டு சவுதி அரேபியாவால் கொல்லப் பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த கொலை ஈரானில் கடும் எதிர்ப்பை சம்பாதித்ததுடன் சவுதி அரசுக்கு எதிராகப் பாரிய ஆர்ப்பாட்ட பேரணிக்கும் வழி வகுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகம் முழுதும் ஷைட்டி இன முஸ்லிம்களுக்கு ஒரு மிகச் சிறந்த பாதுகாவலராக செயற்பட்டவர் அல் நிம்ர் என்றும் ஈரானிய மக்கள் நம்புகின்றனர்.

ஈரான் மற்றும் சவுதி இடையேயான இந்த முரண்பாடு இவ்விரு நாடுகளுக்கும் இடையே  இருந்த இராஜ தந்திர உறவைத் தடை செய்துள்ளதாக உத்தியோகபூர்வ செய்திகள் கூறுகின்றன.

0 Responses to இவ்வருடம் சவுதி அரேபியாவுக்கான ஹஜ் யாத்திரை ரத்து!:ஈரான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com