Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜீவ் காந்திக்குப் பிறகு சோனியா காந்தி இல்லாவிடில் காங்கிரஸ் கட்சி குலைந்து போயிருக்கும் என்று மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி கேரளா, அசாமில் ஆட்சியை இழந்துள்ளது. மேற்கு வங்கம் மற்றும் தமிழகத் தேர்தலிலும் பெரிய அளவில் அக்கட்சியால் தொகுதிகளைக் கைப்பற்ற முடியவில்லை. இது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியலுக்கு அப்பாற்பட்டு சோனியா காந்தியைப் பாராட்டித்தான் ஆக வேண்டும் என்று வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி இறப்புக்குப் பிறகு சோனியா காந்தி மிகச் சாமர்த்தியமாக கட்சியைக் காப்பாற்றினார் என்றும், அவர் மட்டும் இல்லை என்றால் கட்சி என்றோ குலைந்து போயிருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

எனினும், கட்சியை சுய ஆய்வு செய்து கட்சியை மேம்படுத்தும் முயற்சிகளை காங்கிரஸ் கையாள வேண்டிய சரியான தருணம் இது என்றும் வெங்கைய நாயுடு மேலும் ஆலோசனை கூறியுள்ளார்.

0 Responses to சோனியா இல்லாவிடில் காங்கிரஸ் கட்சி குலைந்து போயிருக்கும்: வெங்கைய நாயுடு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com