வடக்குக் கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுத்தல் உள்ளிட்ட பல விடயங்களை முன்மொழிந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சமர்ப்பித்த தனிநபர் சட்டமூலத்தினை மாகாண சபைகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் நேற்றைய (செவ்வாய்க்கிழமை) அமர்வுகள் ஆரம்பித்த வேளையில் கருத்து வெளியிடும் போதே சபாநாயகர் மேற்கண்ட விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டமூலம் எம்.ஏ.சுமந்திரனினால் கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இது சகல மாகாண சபைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டதோடு சகல மாகாண சபைகளினதும் கருத்துக்கள் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தன.
இதன்படி கிழக்கு, மேல், தென், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாண சபைகள் இந்த சட்டமூலத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட சபாநாயகர் வடமேல் மற்றும் வடக்கு மாகாண சபைகள் திருத்தங்களுடன் இதற்கு உடன்பட்டுள்ளன.

0 Responses to இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்கும் எம்.ஏ.சுமந்திரனின் தனிநபர் சட்டமூலம்; மாகாண சபைகள் அங்கீகாரம்!