ராஜபக்ஷக்களுக்கு தான் விசுவாசமாக இருந்த போதிலும், அவர்கள் நன்றியுணர்வு அற்றவர்களாக இருந்ததாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டமை தான் செய்த மிகப்பெரிய தவறாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கதிர்காமத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேர்வின் சில்வா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, “ராஜபக்ஷக்களுக்கு நான் விசுவாசமானவனாகவே இருந்தேன். எனினும், மக்களுக்குச் சேவையாற்ற முடியாத அமைச்சொன்றையே எனக்குக் கையளித்தனர். மக்கள் தொடர்பு அமைச்சின் ஊடாக, என்னால் எதனையும் செய்யமுடியாமல் போய்விட்டது. நன்றியுணர்வே சிறந்த மக்களின் குணமாகும். எனினும், ராஜபக்ஷக்களுக்கு அந்த நன்றியுணர்வே இல்லை.” என்றுள்ளார்.

0 Responses to ராஜபக்ஷக்கள் நன்றியுணர்வு அற்றவர்கள்: மேர்வின்