Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சென்ற வாகனத்தில் லட்சக்கணக்கான பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்செந்தூர் தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறார் சரத் குமார். இவர் கடந்த சில நாட்களாக தென்காசித் தொகுதியில் முகாமிட்டு தமக்கு வாக்குச் சேகரித்து வருகிறார். இன்று தென்காசிக்கு வந்த சரத் குமார் வாகனத்தை பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.

அப்போது வாகனத்தில் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் 9 லட்சம் ரூபாய் இருந்த்தாகத் தெரிய வருகிறது. ஆவணங்கள் இல்லாத காரணத்தில்னால் பணத்தைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அதை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 9 லட்சத்துக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

0 Responses to சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வாகனத்தில் லட்சக்கணக்கான பணம் பறிமுதல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com