Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையினால் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து காத்துக்கொள்வதற்காக பாதுகாப்பான இடங்களை நோக்கி பொதுமக்களை நகருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டிக் கொண்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து நாட்டுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்துவதற்காக அலரிமாளிகையில் பிரதமர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தான் அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளுக்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டதாகவும், பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை ஆரம்பிக்கும்போதே தாம் அவதானம் செலுத்தியிருந்ததாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கே தமக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும், 150 படகுகள் கொழும்பில் கடமைகளில் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மக்களை அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட வீடுகளை மீளக்கட்டிக் கொடுப்பதற்கான கலந்துரையாடல்கள் நிதி அமைச்சுடன் இடம்பெற்று வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to சீரற்ற காலநிலையினால் தொடரும் அனர்த்தங்கள்; பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர பொதுமக்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com