Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் நீடித்த யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்புக்களை மறந்து அபிவிருத்தி நோக்கி பயணிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோலட் குரே தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி அவசியமென்றால் வடக்கு மாகாண சபையும், மத்திய அரசாங்கமும் ஒன்றோடு ஒன்று இணங்கிச் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி விஸ்வமடு சிவில் பாதுகாப்பு தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே வடக்கு மாகாண ஆளுநர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “நாட்டில் நீடித்து வந்த யுத்தம் நிறைவடைந்துள்ளது. இரு பக்கங்களிலும் இழப்புக்கள் இருந்தன. அவை அனைத்தையும் மறந்து எமது நாட்டினை அபிவிருத்தி பாதையை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். அபிவிருத்தியை நோக்கி செல்ல வேண்டுமென்றால் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் வடக்கு மாகாண சபையும், மத்திய அரசாங்கமும் ஒற்றுமையாக சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.

நாம் வணங்கும் தெய்வங்களான புத்தராக இருக்கட்டும் விஷ்ணுவாக இருக்கட்டும், அவர்களே ஒரே ஆலயத்தில் ஒற்றுமையாக இருக்கும் போது வணங்கச் செல்லும் நாம் மட்டும் ஏன் சண்டை பிடிக்க வேண்டும். இனிமேல் எங்களுக்கெல்லாம் யுத்தம் வேண்டாம். நீங்கள் ஒருதாய் பிள்ளை போல் வேலை செய்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியும். அனைவரும் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்பதே எனது விருப்பம். அதற்காகவே நானும் பாடுபடுகிறேன்.” என்றுள்ளார்.

0 Responses to இழப்புக்களை மறந்து அபிவிருத்தி நோக்கி பயணிக்க வேண்டும்: ரெஜினோல்ட் குரே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com