Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சட்டத்துக்குப் புறம்பாக வேவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப் பட்டு சனிக்கிழமை எகிப்து நீதிமன்றம் 2 அல்ஜசீரா ஊடகவியலாளர்கள் உட்பட 6 பேருக்கு மரண தண்டனை அளித்துள்ளது. எகிப்தின் முன்னால் அதிபர் முஹம்மது மோர்ஸி மற்றும் அவரது உதவியாளர்கள் அடங்கலாக இந்த 6 பேரும் எகிப்து அரசு தொடர்பான இரகசியங்களை கத்தார் நாட்டுக்குக் கசிய விட்டுள்ளனர் என்று குற்றம் சுமத்தப் பட்டே இத்தீர்ப்பு அவர்களுக்கு அளிக்கப் பட்டுள்ளது.

ஆனால் அல்ஜசீரா ஊடகமோ இத்தீர்ப்பைக் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன் இது நீதிக்குப் புறம்பானது என்றும் முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டது என்றும் சாடியுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை எகிப்து நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கில் ராஸ்ட் மீடியா சேனல் ஊடகவியலாளர் உட்பட 3 பத்திரிகையாளர்களும் நேரில் ஆஜராகவில்லை என்பதுடன் எகிப்து மதத் தலைவர்கள் ஆதிக்கமும் நிறைந்திருந்தது. அல்ஜசீரா ஊடகவியலாளர்கள் அந்நிறுவனத்தின் முன்னால் செய்தி இயக்குனர் இப்ராஹிம் மொஹம்மெட் ஹெலால் மற்றும் முன்னால் தயாரிப்பாளர் அலா ஒமர் மொஹம்மட் சப்லான் என அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

ராஸ்ட் ஊடகத்தின் நிருபர் அஸ்மா மொஹம்மெட் அல் கதீப் எனவும் இனம் காணப் பட்டுள்ளார். தற்போது மரண தண்டனை விதிக்கப் பட்ட 6 பேரும் போலிஸ் கஸ்டடியில் உள்ளனர். இதேவேளை 2016 ஆம் ஆண்டுக்கான பத்திரிகை சுதந்திர நாடுகளின் பட்டியலில் எகிப்து அரசாங்கம் 180 நாடுகளில் 159 ஆவது இடத்தில் மிக மோசமான நிலையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to 2 அல்ஜசீரா பத்திரிகையாளர்கள் உட்பட 6 பேருக்கு எகிப்து மரண தண்டனை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com