Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தற்போது பிரான்ஸில் நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கான யூரோ 2016 உதை பந்தாட்ட போட்டிகளின் போது தீவிரவாதிகள் குண்டுத் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு முன்னமே இருந்ததால் போலிஸ் பாதுகாப்பு மிக அதிகமாகவே போடப் பட்டுள்ளது. எனினும் தற்போது இத்தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்குக் கிடைக்கக் கூடிய வெடி குண்டுகள் தொடர்பாகப் போலிசார் சோதனை நடத்தச் சென்ற போது அவை இன்னமும் கிடைக்கப் பெறவில்லை என அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால் ஆயுதக் கிடங்குகள் அல்லது பதுங்கு குழிகள் தொடர்பான ரெயிடு அதிகரிக்கப் பட்டுள்ளதுடன் குண்டுத் தாக்குதல் சதி குறித்த அச்சமும் எழுந்துள்ளது.

 சமீபத்தில் தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்த பெல்ஜியத்தில் மாத்திரம் சனிக்கிழமை ஒரே இரவில் போலிசார் சுமார் 40 வீடுகளில் நடத்திய ரெயிடில் 40 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இந்நிலையில் தான் யூரோ 2016 போட்டிகள் மீது தாக்குதல் தொடுக்கவென தீவிரவாதிகள் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருக்கக் கூடிய பாதுகாப்பு அரண்கள் இன்னமும் கண்டு பிடிக்கப் படவில்லை என பெல்ஜியம் பாதுகாப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பிரான்ஸின் பாரிஸ் நகரிலும் அதைத் தொடர்ந்து பெல்ஜியத்தின் புருஸ்ஸெல்ஸ் இலும் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்கள் உலகை உலுக்கி இருந்தன. மேலும் சனிக்கிழமை அயர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய அணிகள் மோதிய போட்டியின் போது தீவிரவாதிகள் புருஸ்ஸெல்ஸில் கவனத்தை சிதைக்க தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப் பட்ட போதும் எந்த ஒரு சிறு தாக்குதல் சம்பவமும் இடம்பெறவில்லை.

இதேவேளை பங்களாதேஷிலுள்ள சுமார் ஒரு இலட்சம் இஸ்லாமிய மத குருமார் தீவிரவாதம் 'ஹராம்' (தடை செய்யப் பட்டது) என்று பிரகடனம் (ஃபத்வா) செய்துள்ளனர். 101,524 மத குருமார் அல்லது மதக் கல்வியில் தேர்ச்சி பெற்றோர் கையெழுத்திட்ட இந்த ஃபத்வா,' இஸ்லாம் சமாதானத்துக்கு உரிய ஒரு மதம். தீவிரவாதத்தை ஆதரிப்பது அல்ல!' என்றுரைப்பதாகக் கூறப்படுகின்றது.

0 Responses to யூரோ 2016 உதை பந்தாட்ட போட்டி மைதானத்தில் குண்டுத் தாக்குதல் சதி!:போலிஸ் அதிரடி வேட்டை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com