Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மூத்த குடிமகன் என்கிற முறையில் கருணாநிதிக்கு சட்டப்பேரவையில் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று, விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு வசதியான இருக்கை அமைத்துத் தரவில்லை என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் சென்னையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்ட தொல்.திருமாவளவன் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியை அரவணைத்து ஆளும்கட்சி நடந்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். அதோடு மூத்த குடிமகனான கலைஞருக்கு சட்டப்பேரவையில் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவை ,ஒ.பன்னீர் செலவம் திமுக தலைவர் கருணாநிதி என்று பேச ஆரம்பிதத்தாகவும், இதற்கு திமுகவினர் கருணாநிதியை பெயர் சொல்லி அழைக்கலாமா என்று அமளியில் ஈடுபட்டதாகவும் தெரிய வருகிறது. திமுக உறுப்பினர் துரை முருகன், நாங்களும் முதல்வரை பெயர் சொல்லி அழைக்கலாமா என்று கேட்டதாகவும் தெரிய வருகிறது.சபாநாயகர் தனபால், எந்தவித பொறுப்பிலும் இல்லாதவரை பெயர் சொல்லி அழைப்பதில் ஒன்றும் தவறில்லை என்று கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

0 Responses to மூத்த குடிமகன் கருணாநிதிக்கு சட்டப்பேரவையில் உரிய மரியாதை: திருமாவளவன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com