Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நோயாளிகள் அல்லது வயதானவர்கள் தங்கள் நோய் முற்றிய தருணத்தில் அதைத் தீர்க்க முடியாது என்று உறுதியான பின்னர் குறித்த நோயாளர்கள் அல்லது உறவினர்கள் விரும்பும் பட்சத்தில் அவரது உயிரை டாக்டரின் துணையுடன் போக்கிக் கொள்ளுதல் கருணைக் கொலை எனப்படுகின்றது. நோயாளிகள் தீவிரமான வலி மற்றும் வேதனையைத் தொடர்ந்து அனுபவிப்பதை அனுமதிக்காதது ஒன்றே நோக்கமாக உடைய இந்த நடைமுறை சட்டத்தில் இன்றுவரை விவாதத்துக்கு உரிய ஒரு விடயமாகவே இருந்து வருகின்றது.

மேலும் உலகில் எல்லா நாடுகளும் கருணைக் கொலையை ஆதரிப்பவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அண்மையில் கனடாவில் குணப்படுத்த முடியாத நோயாளர்கள் அல்லது அவர்களின் உறவினர்கள் விரும்பினால் அவர் கருணைக் கொலை செய்து கொள்ள டாக்டர்கள் உதவுவதற்கு அனுமதி அளிக்கப் பட்டு சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது. ஆனால் இது ஆரம்பத்தில் மிகவும் கட்டுக் கோப்பான நடைமுறைகளையே கொண்டிருக்கும் எனத் தெரிய வந்துள்ளது. எனினும் இன்னும் சில காலத்தில் இந்த சட்டம் இன்னமும் விரிவாக்கப் படும் எனவும் கனேடிய அரசு அறிவித்துள்ளது. உலகில் கருணைக் கொலையை ஆதரிக்கும் நாடுகளாக ஏற்கனவே சுவிட்சார்லாந்து, நெதர்லாந்து, அல்பேனியா, கொலம்பியா மற்றும் ஜப்பான் ஆகியவை விளங்குகின்றன.

0 Responses to கனடாவில் கருணைக் கொலைக்கு சட்ட அங்கீகாரம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com