கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கும் 44 இலங்கையர்களை இந்தோனேஷியாவின் ஆச்சே மாநிலத்துக்கு அருகே கடலில் வைத்து அந்நாட்டுப் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த இலங்கையர்களிடம் சட்டபூர்வமான எந்த ஆவணங்களும் இல்லை என்றும், அவர்கள் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் என்றும் அவுஸ்திரேலிய ஊடகமான 'த ஏஜ்' செய்தி வெளியிட்டுள்ளது.
44 பேரில் 20 ஆண்களும் ஒரு கர்ப்பிணி உட்பட 15 பெண்களும் 9 குழந்தைகளும் உள்ளனர் என்று அவர்களது படகு வரை சென்றுவந்த பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளார்கள்.
மீன்பிடி வள்ளமாக மாற்றியமைக்கப்பட்ட சுமார் நூறுபேர் பயணம் செய்யக்கூடிய இந்த படகில் உள்ள அனைவரும் தாங்கள் அவுஸ்திரேலியா நோக்கி போய்க்கொண்டிருக்கின்றனர் எனக் கூறியுள்ளனர்.
போதியளவு உணவு மற்றும் எரிபொருள்கள் அவர்களது படகில் இருப்பதாகவும் அவர்கள் மிகவும் சந்தோசமாக காணப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவுத்துள்ளனர்.
பயண ஆவணங்கள் ஏதுமற்ற அவர்களை நாட்டுக்குள் இறங்கவிட முடியாது என்றும் அவர்கள் அனைவரையும் உடனடியாக திரும்பிப்போகுமாறு கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தாங்கள் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுகளை நோக்கி சென்றுகொண்டிருகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.
புகலிடக்கோரிக்கையாளர்கள் பயணம் செய்யும் படகின் இயந்திரம் அடிக்கடி சூடாகி செயலிழப்பதால் அவர்கள் தொடர்ந்து பயணம் செய்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர் எனவும் தாங்கள் மீண்டும் அவர்களது படகுக்கு சென்று அவர்களின் நிலைகுறித்து சோதனை செய்யவுள்ளனர் எனவும் பயங்கர காற்றும் கடல்கொந்தளிப்பும் காணப்படுவதால் அவர்களை நெருங்கிச்செல்வதில் சிக்கலாக உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

0 Responses to கடல் மார்க்கமாக ஆஸி செல்லும் 44 இலங்கையர்கள் இந்தோனேஷிய பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டனர்.