ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.
இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதான எதிர்பார்ப்புக்கள் தொடர்பில், மனித உரிமைகள் பேரவையின் இந்தக் கூட்டத் தொடரில் ஆராயப்படவுள்ளது.
இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்துகொள்ளவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளக விசாரணை பொறிமுறையின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் 29ஆம் திகதியே உரையாற்றவுள்ளார்.
மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரானது இலங்கைக்கு இம்முறை மிகவும் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகின்றது. காரணம், ஜூன் மாதம் 29ஆம் திகதி இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சையில் அல் ஹுசைனால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அந்த அறிக்கையில் நாட்டின் மனித உரிமை நிலைமை தொடர்பாக தான் மேற்கொண்ட மதிப்பீடு மற்றும் அரசாங்கத்தின் நல்லிணக்க வேலைத்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கவுள்ளார்.

0 Responses to ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்; வரும் 29ஆம் திகதி இலங்கை விவகாரம்!