அமெரிக்காவின் ஒர்லாண்டோ நகரின் இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சுமார் ஐம்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஒர்லாண்டோ நகர மேயர் தெரிவித்துள்ளார்.
அந்த துப்பாக்கிதாரி, தாக்குதல் ரைபிள் மற்றும் கைத்துப்பாக்கி வைத்திருந்தார் என்றும் பணயக் கைதிகளை பிடித்து வைத்திருந்த அவர், சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னர் பொலிஸாரை நோக்கி சுட்டார் என்றும் கூறப்படுகிறது.
இதனை ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என புலனாய்வு மேற்கொள்ளப்படுவதாக ஃபுளோரிடா மாகாண அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காயம் அடைந்த மேலும் 53 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலை தனியாக நடத்தியுள்ளதாக கருதப்படும் சந்தேக நபர் உள்ளூர் பகுதியை சார்ந்தவர் அல்லர் என்று பொலிர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் நடைபெற்றுள்ள பல்ஸ் இரவு கேளிக்கையகம், ஒர்லாண்டோவின் முதல்தர ஒரு பாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகம் என்று விளம்பரப்படுத்திக் கொள்கிறது.

0 Responses to அமெரிக்காவின் ஒர்லான்டோ நகரில் துப்பாக்கிச் சூடு; 50 பேர் பலி!