ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி வேலூரில் நடைபெற உள்ள பேரணியில் நாம் தமிழர் கட்சி பங்கேற்க உள்ளதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலுள்ள 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி வேலூரில் வருகிற 11ம் தேதி நடைபெற உள்ள பேரணியில் அரசியலை கடந்து தங்களது கட்சி பங்கேற்க உள்ளதாகவும், தமிழக அரசு அரசியலமைப்பு சட்டத்தின் 161 பிரிவின் படி தனது அதிகாரத்தை பயன்படுத்தி 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இலங்கை இராணுவத்தால் தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், மீனவர்கள் தாக்கப்படுவதும் தொடர்ந்து வரும் நிலையில் அதனை தடுக்க தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தினாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
கேரளாவில் இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் ஐநா சபை வரை எதிரொலித்த நிலையில் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை தடுக்க நடவடிக்கை இல்லாதது வேதனையளிப்பதாகவும் சீமான் தெரிவித்தார்.

0 Responses to 7 பேரையும் விடுவிக்க கோரி நடத்தப்படும் பேரணியில் பங்கேற்பு: ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி