ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியத் தரைக்கடல் வழியாக தப்பிக்கும் அகதிகள் உயிரிழப்பு அதிகமாகி வருகிறது என்று ஐநா சபை தெரிவித்துள்ளது.
நைஜீரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகளில் வறுமை தாங்க முடியாமல், அல்லது தீவிரவாதத் தாக்குதலுக்கு பயந்து, மத்தியத் தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல மக்கள் முடிவெடுக்கின்றனர். அங்கு சவுகரியமான வாழக்கை வாழலாம் என்கிற கனவில் கள்ளத்தோணி ஏறி அவர்கள் புறப்படுகின்றனர்.
இப்படிப்பட்ட படகுகளில் வெகு தூரம் பயணிக்க முடியாதது ஒரு காரணம், படகு நீரில் மூழ்கிப் போவது ஒரு காரணம், உணவு, தண்ணீர் கிடைக்காமல் உடல் நலம் குன்றுவது ஒரு காரணம் என்று அவர்கள் இறக்க நேரிடுகிறது.
2014ம் ஆண்டிலிருந்து இப்படித் தப்பிக்க நினைத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை என்பது 10 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது என்று ஐநா தெரிவித்துள்ளது.எனவே, இப்படிப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய ஏதாவது வரையறைத் திடம் வகுக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளது ஐநா

0 Responses to ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியத் தரைக்கடல் வழியாக தப்பிக்கும் அகதிகள் உயிரிழப்பு அதிகம்: ஐநா