அத்தியாவசியப் பொருட்களுக்கான பணவீக்கம் உயர்ந்து வருவது குறித்து அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி.
தமிழகத்தில் தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களுக்கான பணவீக்க சதவிகிதம் உயர்ந்துக்கொண்டே வருகிறது என்று அருண் ஜெட்லி அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அவசர ஆலோசனையில், மத்திய உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர், வேளாண் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துக்கொள்கின்றனர். கடந்த மே மாதம் மட்டும் அத்தியாவசிய பொருட்களுக்கான பண வீக்கம் 0.79 சதவிகிதமாக இருந்தது என்றும், உணவுப் பொருட்களுக்கான பண வீக்கம் 7.88 சதவிகிதமாக இருந்தது என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0 Responses to அத்தியாவசியப் பொருட்களுக்கான பணவீக்கம் உயர்ந்து வருவது குறித்து அவசர ஆலோசனை: அருண்ஜெட்லி