Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமாக, தேமுதிக சுதந்திரமாக முடிவெடுக்கும் அதிகாரம் பெற்ற கட்சிகள் என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

செய்தியாளர்கள சந்தித்த திருமாவளவன், மக்கள் நலக் கூட்டணியில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார். நாங்கள் 3வது அணி என்று எடுத்த கொள்கை முடிவிலும் எந்தவித மாற்றமும் இல்லை, உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி இணைந்து போட்டியிட வேண்டும் என்பதில் விடுதலைச் சிறுத்தைகள் மிக உறுதியாக உள்ளது என்றும் திருமாவளவன் மேலும் கூறியுள்ளார்.

தமாக,தேமுதிக ஆகிய இருக் கட்சிகளும் மக்கள் நலக் கூட்டணியில் ஒரு அங்கமாக சேர்ந்துக்கொண்டதேத் தவிர மக்கள் நலக் கூட்டணியோடு இணையவில்லை. எனவே, இருக் கட்சிகளுக்கும் சுதந்திரமாக முடிவுகள் எடுக்கும் அதிகாரம் உள்ளது என்று கூறியுள்ள அவர், ஆனால், மக்கள் நலக் கூட்டணியில் இருக்கட்சிகளும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகளின் முடிவு என்றும் கூறியுள்ளார்.

0 Responses to தமாக, தேமுதிக சுதந்திரமாக முடிவெடுக்கும் அதிகாரம் பெற்ற கட்சிகள்: தொல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com