Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தோல்வியைக் கண்டு நான் அஞ்சவில்லை, எனவே தொண்டர்களும் அஞ்ச வேண்டாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

காரைக்குடியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட விஜயகாந்த், எப்போதும் போல பத்திரிகையாளர்களைச் சாடினார். பின்னர் நன் யாருக்கும் பய்டப்பட மாட்டேன் என்று கூறினார்.அதோடு தோல்வியைக்கண்டு தாம் ஒருபோதும் அஞ்சவில்லை என்றும், எனவே தொண்டர்களும் அஞ்ச வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். எத்தனை முறை கீழே விழுந்தாலும் ஃபீனிக்ஸ் பறவை போல எழுவேன் என்றும் அவர் கூறினார்.

முன்னதாகப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், மக்களின் நலனுக்காக, ஊழல் இல்லாத ஆட்சி அமைக்க பாடுபட்டோம். இருப்பினும் ஒரு நாள் ஜெயித்து ஆட்சியில் அமர்வோம் என்றும் கூறினார். கேப்டன் விழுந்து விழுந்து எழுந்தவர்தான் என்றும், இந்தத் தோல்வி என்பது திரைப்படங்களில் கதாநாயகன் அடிவாங்குவது போல வாங்கி, பின்னர் கெட்டவர்களைத் துவம்சம் செய்வது போலத்தான் கேப்டனுக்கு என்றும் கூறியுள்ளார்.

0 Responses to தோல்வியைக் கண்டு நான் அஞ்சவில்லை: விஜயகாந்த்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com