Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த மாதம் விபத்தில் சிக்கி 66 பயணிகளின் உயிரைக் குடித்த எகிப்து ஏர்லைன்ஸ் விமானத்தின் கருப்புப் பெட்டி மத்திய தரைக் கடலில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் மே 19 ஆம் திகதி இடம்பெற்ற இவ்விபத்துக்கான காரணம் பற்றிய சான்றுகள் கிடைக்கலாம் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப் பட்டுள்ளது.

குறித்த இரு கருப்பு பெட்டிகளிலும் ஒன்று மிகவும் சேதம் அடைந்த நிலையில் மீட்கப் பட்ட போதும் அதிலுள்ள முக்கியமான பகுதியான மெமரி யுனிட் பத்திரமாக இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. எகிப்தின் துறைமுக நகரான அலெக்ஸாண்ட்ரியாவுக்கு அண்மையில் மீட்கப் பட்ட இக்கருப்புப் பெட்டி மற்றும் அதன் பாகங்கள் விசாரணைக் குழுவிடம் விரைவில் சமர்ப்பிக்கப் படவுள்ளன. எகிப்து ஏர்லைன்ஸின் ஏர்பஸ் A320 இற்கு சொந்தமான இந்த விமானம் மே 19 ஆம் திகதி கெய்ரோவில் இருந்து பாரிஸ் நோக்கி சென்று கொண்டிருந்த போது கிரேக்கத் தீவான க்ரேட்டே மற்றும் எகிப்து கடற்கரைக்கு இடையே கடலில் வீழ்ந்து விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த அனைத்து 66 பயணிகளும் பலியாகி இருந்தனர்.

இந்த விபத்துக்கான உறுதியான காரணம் இன்னமும் தெளிவாக தெரிய வரவில்லை. அதனால் இது தீவிரவாத செயலா என்பது குறித்தும் கூறமுடியாது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த விமான விபத்துக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to விபத்தில் சிக்கிய எகிப்து ஏர்லைன்ஸின் கருப்புப் பெட்டி சிக்கியது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com