இனப்பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் அரசியல் கைதிகளில் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய குழுவொன்றை அமைத்துள்ளது.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், கோவிந்தன் கருணாகரம்(ஜனா), ஹென்றி மகேந்திரன், என்.ஸ்ரீகாந்தா, சிவநேசன்(பவன்), ஆர்.ராகவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில், புதிய தேர்தல் முறைமை மாற்றம், மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக் கூறும் விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகளிடம் அரசாங்கம் காட்டும் நழுவல் போக்கு மற்றும் வடக்கு மாகாண சபையில் நிலவும் குழப்பங்கள் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் ஆராயப்பட்டது.
அத்தோடு, 2016ஆம் ஆண்டுக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படுவதாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் உறுதியளிக்கப்பட்ட நிலையில், அதற்கான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை மற்றும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு உட்பட தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு அரசியல் சாசன ரீதியாக தீர்வொன்றை எட்டுவதாக இருந்தால் அது தொடர்பாக அரசாங்கத்துடன் உத்தியோகபூர்வமான பேச்சுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று பங்காளிக் கட்சிகளினால் வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து, அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்துடன் விரைவில் உத்தியோகபூர்வ பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் சார்பில் தலா இருவர் வீதம் எட்டுப் பேர் இந்தக் குழுவில் இடம்பெறுகின்றனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, ரெலோ சார்பில் அதன் தலைவரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், ரெலோவின் மூத்த உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் அதன் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், அக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன், புளொட் சார்பில் அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஆர்.ராகவன் ஆகியோரே இந்தக் குழுவில் இடம்பெறுகின்றனர்.

0 Responses to அரசாங்கத்துடனான பேச்சுக்களுக்காக இரா.சம்பந்தன் தலைமையில் புதிய குழு: கூட்டமைப்பு அமைத்தது!