Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கோடிக் கணக்கில் செலவு செய்து அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்களை வாங்குவதன் மூலம் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்று கலாச்சார அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் பாலித தேவப்பெரும தெரிவித்துள்ளார்.

பயன்படுத்தாது துருப்பிடிக்கும் நிலையில் காணப்படுகின்ற குண்டு துளைக்காத வாகனங்கள் மற்றும் பயன்படுத்த முடியுமான அரச வாகனங்கள் இருந்தும் புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்குவது தேவையற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதி அமைச்சர் என்ற வகையில் தனக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாகனத்தைக் கூட தான் மறுத்துள்ளதாகவும் பாலித தேவப்பெரும கூறியுள்ளார்.

இதேவேளை, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டோர் தமக்கு சொகுசு வாகனங்கள் தேவையில்லை என்று அரசாங்கத்திடம் அறிவித்துள்ளார்கள்.

அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளமையை அடுத்து நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்கள் வாங்குவதால் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது: பாலித தேவப்பெரும

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com