Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையின் பொறுப்புக் கூறல் கடப்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைனுடன், பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாயத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் ஹியுகோ ஸ்வயர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பு ஜெனீவாவில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதனிடையே, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி கலாநிதி ரவிநாத ஆரியசிங்கவுடனும், ஹியுகோ ஸ்வயர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடர் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், இந்தச் சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளமை முக்கியத்துவத்துடன் நோக்கப்படுகின்றது.

0 Responses to இலங்கையின் பொறுப்புக் கூறல் கடப்பாடுகள்; ஹியுகோ ஸ்வயர், சையிட் அல் ஹூசைன் பேச்சு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com