Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தன்னுடைய பதவியிலிருந்து எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தோடு விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகவேண்டும் என்று பிரித்தானிய மக்களில் 51.9 வீதமான மக்கள் வாக்களித்துள்ள நிலையில், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், இலண்டன், 10, டௌனிங் வீதி இல்லத்துக்கு வெளியே ஊடகவியலாளர்களிடம் இன்று வெள்ளிக்கிழமை பேசிய டேவிட் கமரூன், எதிர்வரும் ஒக்டோபரில் தான் பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்திருக்கிறார்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று டேவிட் கமரூன் பிரச்சாரம் செய்து வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பதவி விலகுகின்றார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com