சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்கிற மென்பொறியாளர், மர்ம நபர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.
இவரைக் கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தார் என்பதில் மர்மம் நீடித்து வருகிறது. இவ்வழக்கில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், போலீசார் குற்றவாளி என்று கண்காணிப்புக் கேமிராவில் பதிவானவரை அடையாளம் கண்ட போதிலும், இவரை சுவாதியின் பெற்றோர், உறவினர், நண்பர் என்று யாருக்கும் அடையாளம் தெரியவில்லை, இதையடுத்து சுவாதி முன்னர் பணிபுரிந்த மைசூர் மற்றும் பெங்களூரு சேர்ந்த நிறுவனங்களில் சுவாதி கொலைக்கு காரணமானவர் குறித்த துப்பு எதுவும்கிடைக்குமா என்கிற நோக்கில் விசாரணை மேற்கொள்ள தனிப்படை மேற்கண்ட இரு ஊர்களுக்கும் விரைந்துள்ளது. இதற்கிடையில் சுவாதியின் சொந்த ஊரான ஸ்ரீரங்கத்துக்கு போலீசார் சென்று விசாரித்து வருகின்றனர்.

0 Responses to சுவாதி கொலை வழக்கில் விசாரணை தீவிரம்!