முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று புதன்கிழமை நிராகரித்துள்ளது.
நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 5 வழக்குகளுக்கு எதிராகவே மனித உரிமை மீறல் மனுவொன்றை பஷில் ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்தார்.
பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையில் மூவர் அடங்கிய குழுவினால்ஆராயப்பட்ட இந்த மனு சட்ட அடிப்படையற்றது என்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நிதி மோசடி விசாரணைப் பிரிவு பணமோசடி சட்டத்தின் கீழ் கம்பஹா, பூகொடை, மாத்தறை மற்றும் கடுவெல நீதவான் மூலம் பீ(B) அறிக்கைகள் தாக்கல் செய்து தன்னை கைது செய்ய முயற்சிப்பதாக அந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவில் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார். அத்துடன், இந்த பீ(B) அறிக்கைகள் தவறாக தாக்கல் செய்யப்பட்டவை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

0 Responses to பஷில் ராஜபக்ஷவின் அடிப்படை மனித உரிமை மீறல் மனு நிராகரிப்பு!