சர்வதேச ரீதியாக அனைத்து நாடுகளினதும் நல்லெண்ணத்தினை வெற்றி கொள்வதன் மூலம் இதுவரை தோல்வியுறச் செய்ய முடியாதுபோன ஈழக் கனவினையும், அது சார் கொள்கையினையும் தோற்கடிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எந்தவகையான விமர்சனங்கள் அவதூறுகள் எழுந்தபோதிலும், அனைத்து மக்களும் சகவாழ்வுடனும் சமத்துவத்துடனும் வாழக்கூடிய ஒரு நாட்டினை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெஹிவளை நகர மண்டபத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற காலம்சென்ற சீ.வீ.குணரத்னவின் ஞாபகார்த்த வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார்.
ஒரு நாடு என்ற ரீதியிலும், இனம் என்ற ரீதியிலும் சகோதரத்துவத்துடனும் சகவாழ்வுடனும் வாழக்கூடிய சமூக அமைப்பினை நிலை நாட்டுவதற்காக மகா சங்கத்தினர் உள்ளிட்ட எல்லா சமயத் தலைவர்களினதும் வழிகாட்டல் சிறப்பாக கிடைக்கப்பெற்றுவருவதாகக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அதற்காக அர்ப்பணிப்புடன் செய்ற்படுமாறும் எல்லா சமயத் தலைவர்களிடமும் கேட்டுகொண்டுள்ளார்.
அரசியல் ஆளுமைகளின் பெறுமானங்களை உரசிப் பார்த்து எதிர்காலத்திற்கு தேவையான அரசியல் தலைவர்களை உருவாக்க வேண்டியது ஒரு யுகத்தின் அவசியமாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஈழக் கனவையும், அது சார் கொள்கைகளையும் தோற்கடிப்பேன்: மைத்திரிபால