கொஸ்கம - சாலாவ இராணுவ ஆயுதக் களஞ்சிய வெடிப்பினை முன்வைத்து, வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று விடுக்கப்படும் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இராணுவம் அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, "கொஸ்கம- சாலாவ சம்பவத்தால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. இது தொடர்பில் சிலர் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
வடக்கிலுள்ள ஒரு சில அரசியல்வாதிகள் கொஸ்கம- சாலாவ சம்பவத்தை முன்னிறுத்தி அங்குள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறுக் கோருகின்றனர்.
அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவின்போது அதனை அண்டிய பிரதேசத்தில் காணப்பட்ட இராணுவ முகாம் காரணமாக துரிதமாக நடவடிக்கைகளை எடுக்க முடிந்தது.
மக்களின் பாதுகாப்புக்கே இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாறாக இன, மத, மொழி பேதங்களின் அடிப்படையில் செயற்படுவதற்கு அல்ல. அவ்வாறுதான் வடக்கில் பல இடங்களில் இராணுவ முகாம்கள் மக்களின் பாதுகாப்புக்கு அமைக்கப்பட்டுள்ளன.
அசாதாரண சூழல் ஏதும் ஏற்படும்போது இராணுவ முகாம்கள் அருகில் இருந்தால் துரித நடவடிக்கை எடுக்க முடியும் என்பதுடன், இழப்புகளையும் தவிர்க்க முடியும்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது: இராணுவம்