Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் பொறுப்புக்கூறும் கடப்பாட்டிற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்று தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறும் செயற்பாடுகள் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றுக்கு உரிய மதிப்பு அளிக்கப்பட வேண்டும். இலங்கை அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகள் சிலவற்றை எடுத்துள்ளபோதும் மேலும் பல விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான ஆய்வுப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமை என்ற தொனிப்பொருளிலான அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

காணாமற்போனவர்கள் குறித்து ஆராய்வதற்காக தனியான அலுவலகமொன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிகளை எடுத்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள நிஷா தேசாய் பிஸ்வால், “ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்கள் நாட்டுக்குள் வருவதை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது. அத்துடன், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளில் தொழில்நுட்ப உதவிகள் மற்றும் துறைசார் நிபுணர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கியிருப்பது முன்னேற்றகரமானது.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கையின் பொறுப்புக்கூறும் கடப்பாட்டிற்கு அமெரிக்கா ஆதரவு: நிஷா தேசாய் பிஸ்வால்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com