தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட்டு, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு மாகாண சபையின் நேற்றைய (செவ்வாய்க்கிழமை) அமர்வுகளில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நீதிமன்றத்தால் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டால், அது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு சமர்ப்பித்து, 3 கிழமைகளுக்குள் அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்படவேண்டும். ஆனால், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அவ்வாறு நடைபெறாமல், அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். காணாமற்போனோர், அரசியல் கைதிகள் உள்ளிட்டவர்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளாமல், நல்லிணக்கம் உருவாக்க முடியாது.” என்றுள்ளார்.

0 Responses to பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்: சிவாஜிலிங்கம்