காங்கிரஸ் எம் எல் ஏ விஜயதாரிணிக்கு கோவை நீதி மன்றம் பிடிவாரண்ட்உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம் எல் ஏ விஜயதாரிணி, கன்னியாகுமரியில் கடந்த 2015ம் ஆண்டு நடைப்பெற்றப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக வழக்குப்பதிவாகி உள்ளது. இவ்வழக்கில் இன்று நேரில் ஆஜராக வேண்டிய விஜயதாரிணி ஆஜராகவில்லை. இதையடுத்து கோவை நீதிமன்றம் விஜயதாரினிக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள விஜயதாரிணி, தமது கணவர் இறந்து 100 நாள் நிறைவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தாம் பரபரப்பாக இயங்கி வருவதாகவும், நாளை சென்னை செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்த பிறகும் காழ்ப்புணர்ச்சி காரணமாக தம்மீது நடவடிக்கை எடுக்க தூண்டி உள்ளது தமிழக அரசு என்று கூறியுள்ளார். நாளை சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்க உள்ள நிலையில், தம்மை அதில் கலந்துக்கொள்ள முடியாமல் தமிழக அரசு முடக்கப் பார்க்கும் செயல் இது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!