மத்திய வங்கியின் புதிய ஆளுநராக, பிரதியமைச்சர் எரான் விக்ரமரட்ன நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் 30ஆம் திகதியோடு மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகிக்கும் அர்ஜூன மகேந்திரனின் பதவிக் காலம் முடிவடைகின்றது. அவருக்கு பதவி நீடிப்பினை வழங்குவது தொடர்பில் அரசாங்கத்துக்குள் ஒத்த கருத்துக்கள் எழுவில்லை. இதனால், புதிய ஆளுநர் ஒருவரே நியமிக்கப்படும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
இந்த நிலையிலேயே, முன்னாள் வங்கியாளரான எரான் விக்ரமரட்னவை மத்திய வங்கி ஆளுநராக நியமிப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆர்வம் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.
இதனிடையே, இது குறித்து ஊடகமொன்று வினவியபோது, தற்போது தான் ஒரு அரசியல்வாதியே எனவும், தன்னால் இது குறித்து எதுவும் கூறமுடியாது என்றும் எரான் விக்ரமரட்ன குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மத்திய வங்கி ஆளுநராக எரான் விக்ரமரட்ன நியமனம்?