அரசியல் காரணங்களுக்கு அப்பால் நின்று சிங்கள மொழியாற்றலை விருத்தி செய்து கொள்ள வேண்டும் என்று மாணவர்களிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது, “எமது இலங்கை வாழ் மக்களிடையே ஐயமும், சந்தேகமும், மனக்கிலேசமும், அவநம்பிக்கையும், ஆத்திரமும் இதுகாறும் ஏற்பட முக்கிய காரணம் தவறான புரிதலாகும். இருமொழி பேசும் மக்களிடையே புரிந்துணர்வு ஏற்பட வேண்டுமானால் ஒருவர் மொழியை ஒருவர் கற்க வேண்டும்.
நோர்வே போய் அவர்கள் மொழியை எம்மவர் கற்கின்றார்கள், பிரான்ஸ் போய் பிரேஞ்சு மொழியைக் கற்கின்றார்கள். ஆனால் நாம் சிங்கள மொழியைப் புறக்கணிக்கின்றோம்.
நான் சிங்களம் படிக்கத் தொடங்கியது 1955ஆம் ஆண்டில். 1956ஆம் ஆண்டில் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவந்ததும் ஆத்திரத்தில் சிங்கள மொழியைப் படிப்பதை நிறுத்திக் கொண்டேன். இன்று குறையுடன் தான் சிங்கள ஊடகங்களுக்கு சிங்களத்தில் எமது பக்க அரசியல் குறைபாடுகளை நான் கூறி வருகின்றேன்.
நான் அன்று தொடங்கிய சிங்களப் படிப்பைத் தொடர்ந்து வந்திருந்தேனானால் எந்தச் சிங்கள அரசியல்வாதிக்கும் அவரின் மொழியிலேயே சுடச் சுடப் பதில் அளித்திருக்கலாம்.
இன்று சிங்கள மாணவர்கள் கட்டாயமாகத் தமிழ் படிக்கத் தொடங்கியுள்ளார்கள். விரைவில் தமிழ்ப் பேசும் சிங்கள அலுவலர்கள் வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பப்படப் போகின்றார்கள்.
நாங்கள் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். சிங்கள அறிவு இல்லாதவர்கள் வருங்காலத்தில் புறக்கணிக்கப்படக்கூடும். ஆகவே அரசியலை மறந்து சிங்கள மொழியாற்றலையும் விருத்தி செய்யுங்கள்.” என்றுள்ளார்.

0 Responses to அரசியலுக்கு அப்பால் நின்று சிங்கள மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்: விக்னேஸ்வரன்