இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் தொண்டமான் அரசாங்கத்தோடு இணைந்து கொள்ளவுள்ளதாகவும், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், அதன்பின்னர் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தது.
இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் முடிவுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வந்திருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாக அந்தக் கட்சிக்கு அமைச்சரவை அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
சுகயீனம் காரணமாக, தற்போது 3 மாத விடுமுறையில் வெளிநாடு சென்றிருக்கும் ஆறுமுகம் தொண்டமான் விரைவில் நாடு திரும்பி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரைச் சந்தித்து பேசுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to ஆறுமுகம் தொண்டமான் அமைச்சராகின்றார்!