அடுத்த தேர்தலில் தேமுதிக இருக்காது என்று மக்கள் தேமுதிக அமைப்பைச் சேர்ந்த சந்திரமோகன் கூறியுள்ளார்.
மக்கள் தேமுதிகவின் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைப்பெற்றது. அப்போது பல்வேறு தீர்மானங்களை இவர்கள் நிறைவேற்றினார்கள். அதில் மக்கள் தேமுதிகவை திமுகவுடன் இணைப்பது என்கிற தீர்மானம், அதிமுக ஆட்சிக்கு வரக்கூடாதது என்று தேமுதிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நினைத்த நிலையில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர தேமுதிக உதவியதற்கு கண்டனம் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து செய்தியாளர்களிட்டம் பேசிய சந்திரமோகன், மிக விரைவில் மக்கள் தேமுதிகவை திமுகவில் இணைக்க உள்ளோம் என்றும், தமிழர்களின் உணர்வோடு கலந்த கலைஞர் மற்றும் ஸ்டாலின் தலைமையில் வழி நடக்க உள்ளோம் என்றும் கூறினார். தேமுதிக அடுத்த தேர்தலில் இல்லாமல் போகும் நிலை தேமுதிகவுக்கு ஏற்பட்டு உள்ளது என்றும் கூறினார். அதோடு, தேர்தல் நிதி என்று பெற்று, அதை விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் என்று மூவரும் தங்கள் இஷ்டத்துக்கு நிர்வகித்து வருகின்றனர். இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடைப்பெற்று உள்ளது என்கிற குற்றச்சாட்டையும் சந்திரமோகன் உள்ளிட்ட குழு வைத்துள்ளது.

0 Responses to அடுத்த தேர்தலில் தேமுதிக இருக்காது: மக்கள் தேமுதிக