சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சுவாதியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பொறியாளர் இளம் பெண்ணான சுவாதி மர்ம நபரால் அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இவரது கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், பல்வேறான கருத்துக்களை எங்களது பெண்ணின் சாவில் திணித்து அவளின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க வேண்டாம் என்று சுவாதியின் பெற்றோர் நேற்று ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சுவாதியின் குடும்பத்தினரை சென்னை சூளைமேட்டில் உள்ள அவர்களது இல்லத்தில் ஸ்டாலின் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார். சுவாதியின் பெற்றோர், தங்களது மக்களுக்கு நேர்ந்தது போல மற்ற பெண்களுக்கு நேரக்கூடாதது என்றும், இனியாவது இதுப்போன்று கொலைகள் நடக்காமல் காவல்துறை நவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியது தமது மனதை மிகவும் உருக்கி உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதோடு, தமிழக சட்டப்பேரவையில் கூலிப்படையினர் அட்டகாசம் அதிகரித்துள்ளது, அவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று தாம் பேசிய போது, தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது என்று தமிழக முதல்வர் அவர்கள் சொன்னார்கள். ஆனால், அதற்குப் பிறகும் சென்னையில் மட்டுமே பல கொலைகள் நடைப்பெற்று உள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஆட்சியாளர்கள் இறங்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

0 Responses to கொலையான சுவாதியின் பெற்றோரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்!