நல்லாட்சி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான சதி முயற்சிகள் நாட்டுக்குள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இதற்கு, இராணுவத்துக்குள் இருக்கும் பாஸிசவாதிகளும் துணைபோகின்றனர் என்று நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கில் செயற்படும் அனைத்து தரப்பினரையும் அடையாளம் காண வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள நவ சமசமாஜ கட்சி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே விக்ரமபாகு கருணாரத்ன இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் பொய் வதந்திகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான சதி நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. இந்த சதித்திட்டங்களுக்குள் கடந்த அரசாங்கத்தில் இராணுவத்துக்குள் இருந்து பாஸிசவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களும் இருக்கின்றனர். அவர்கள்தான் அரசாங்கத்துக்கு எதிரான சதி நடவடிக்கைகளுக்கு மறைந்திருந்து துணைபோகின்றனர்.
அத்துடன் கொஸ்கம சாலாவ இராணுவ ஆயுத களஞ்சியசாலை வெடிப்புக்கான காரணம் இதுவரை வெளிப்படவில்லை. இந்த சம்பவமும் சதி நடவடிக்கையாகவே இருக்கவேண்டும். அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட செயலா என்ற சந்தேகமும் தோன்றுகின்றது.” என்றுள்ளார்.

0 Responses to அரசாங்கத்தை வீழ்த்த இராணுவத்துக்குள் இருக்கும் பாஸிசவாதிகள் முயற்சி: விக்ரமபாகு கருணாரத்ன