Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியை அவமரியாதை செய்தார் என்று, அவர் மீது பொதுநல வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் பதிவாகி உள்ளது.

பீகாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கடந்த யோகா தினத்தன்று பொது மக்கள் முன்னிலையில் யோகா செய்த நரேந்திர மோடி, தேசியக் கொடியை அவமானப் படுத்தி உள்ளார் என்று, விசாரணை நீதி மன்றத்தில் மனு தொடுத்து உள்ளார். அந்த மனுவில், கடந்த வருடம் யோகா தினத்தின் போது மக்கள் முன்னிலையில் யோகா பயிற்சி செய்துக்காட்டினார். நரேந்திர மோடி, அப்போது தம்மீது தேசியக் கொடியைப் போர்த்தி இருந்தார் அவர் என்று கூறியுள்ளார்.

இதில் ஒன்றும் தவறில்லை என்றாலும், தேசியக் கொடியைக் கொண்டு அவர் அடிக்கடி தமது முகத்தைத் துடைத்துக்கொண்டார் என்றும் கூறப்பட்டு உள்ளது. ஒரு கட்டத்தில் தேசியக்கொடியின் மீது அவர் அமரவும் செய்தார் என்று தெரிவித்துள்ள மனுதாரர், இதற்கான ஆதாரங்களையும் இணைத்துள்ளார். இது தேசிய அளவில் உள்ள அனைத்து தேசப்பற்று மிகுந்த மக்களையும் புண்படுத்தும் செயலாக உள்ளது என்பதால், நீதிமன்றம் அவரை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுவை பீகார் நீதிமன்றம் ஜூலை மாதம் 16ம் திகதி  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது,

0 Responses to தேசியக்கொடியை அவமதிப்பு செய்ததாக மோடி மீது நீதிமன்றத்தில் வழக்கு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com