Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை 94 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.

குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. பிரேரணைக்கு ஆதரவாக 51 வாக்குகளும், எதிராக 145 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன. 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டிருக்கவில்லை.

இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.

மக்கள் விடுதலை முன்னணி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது.

முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

0 Responses to ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com