Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வரி வசூலின்போது தேவையற்ற கெடுபிடிகள் விதித்து அச்சுறுத்தக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.

வரி வசூல் குறித்த இரண்டு நாள் மாநாட்டைத் துவக்கி வைத்து நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, வரி வசூலிப்பவர்கள் மக்கள் வரிக்கட்ட வரும்போது தேவையற்ற கெடுபிடிகளை விதித்து அவர்களை அச்சுறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார். அது துன்புறுத்தலாகவும் மாறலாம் என்பதால், வரி வசூலிப்பாளர்கள் நேர்மை, பொறுமை, கவனம் உள்ளிட்டவைகளைக் கடைப்பிடித்து வரி வசூல் செய்ய வேண்டும். வரி செலுத்த வருபவர்களின் நம்பகத்தன்மையை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

வரி வசூலிக்கும் அதிகாரிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்துத் தரப்பட்டு, அலுவலகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

0 Responses to வரி வசூலின்போது தேவையற்ற கெடுபிடிகள் விதித்து அச்சுறுத்தக் கூடாது: பிரதமர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com