இலங்கையின் சிரேஷ்ட அரசியல்வாதியும், முன்னாள் மேல் மாகாண ஆளுநருமான அலவி மௌலானா(84) நேற்று புதன்கிழமை மாலை கொழும்பில் காலமானார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினரான அலவி மௌலானா, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் ஜனவசம நிறுவனத் தலைவராகச் செயற்பட்டிருந்தார். அத்தோடு, ஏராளமான தொழிலாளர் நலப் போராட்டங்களில் ஈடுபட்ட இலங்கையின் மூத்த தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகின்றார்.
1994ஆம் ஆண்டு பதவிக்கு வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் ஊடகத்துறை பிரதி அமைச்சராகவும், தொழில் அமைச்சர் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சராகவும் அவர் செயற்பட்டிருந்தார். அதன்பின்னர் 2004ஆம் ஆண்டு தொடக்கம் மேல் மாகாண ஆளுநராக இரண்டு தடவைகள் பதவி வகித்திருந்தார்.

0 Responses to முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா காலமானார்!