இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பிலான தீர்மானத்திலிருந்தும், அங்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளிலிருந்தும் என்றைக்குமே விலகிச் செல்ல முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடர் கடந்த 13ஆம் திகதி ஆரம்பித்தது. அடுத்த மாதம் முதலாம் திகதி வரையில் இந்தக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இலங்கை தொடர்பில் 29வது கூட்டத்தொடரில் (கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம்) தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அதன் முன்னேற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன், இந்தக் கூட்டத் தொடரின் போது வாய்மொழிமூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் இந்தக் கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வாய்மொழிமூல அறிக்கையை, எதிர்வரும் 29ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ளார்.
இந்நிலையில், தங்கள் நிலைப்பாடு என்னவென்று இரா.சம்பந்தனிடம் ஊடகமொன்று வினவியுள்ளது. அதற்கு அவர் பதிலளிக்கும்போது, "இலங்கை அரசாங்கத்தின் சம்மதத்துடன்தான் கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 29வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்கா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளின் ஆதரவுடன்தான் இந்தத் தீர்மானம் நிறைவேறியது. இந்தத் தீர்மானத்தில் உள்ள அனைத்துப் பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். இது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும் - கடமையாகும். இதிலிருந்து இலங்கை விலகிச்செல்ல முடியாது. இதையும் மீறி இந்தப் பொறுப்பிலிருந்து இலங்கை நழுவிச்செல்ல முற்பட்டால் அதற்கு சர்வதேச நாடுகள் ஒருபோதும் அனுமதிக்காது.
எனவே, ஐக்கிய நாடுகள் தீர்மானத்தில் உள்ள அனைத்துப் பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான வாய்மொழிமூல அறிக்கையை நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். இப்போதைக்கு இதற்கு மேல் வேறு எதனையும் கூறமுடியாது.” என்றுள்ளார்.

0 Responses to ஐ.நா.வில் வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து இலங்கை விலகிச் செல்ல முடியாது: சம்பந்தன்